மியகான் பள்ளியில் கஜா புயலுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
மியகான்பள்ளி ஹமிதியா நகர் ஜமாத் மற்றும் முஸ்லீம் நலவாழ்வு சங்கமும் இணைந்து கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதி திரட்டினர். இவர்கள் திரட்டிய நிதியை பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மூலமாக பாதிக்கப்பட்ட மககளுககு வழங்க தீர்மானித்தனர்.
இவர்கள் திரட்டி ரூ 86 ஆயிரத்தினை வழங்கும் நிகழ்வு மியகான்பள்ளி ஹமிதியா நகர் பள்ளிவாசல் முன்பு நடந்தது. பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் செய்யது பாஸில் சமீர் தலைமை வகித்தார். பாப்புலர் ப்ரண்ட் டிவிஷன் தலைவர் அப்துல்காதர் முன்னிலை வகித்தார். ரொக்க பணம் 86 ஆயிரத்தினை மியகான் பள்ளி ஹமிதியா நகர் ஜமாத் செயலாளர் கோஸ்கனி, முஸ்லீம் நல வாழ்வு சங்க பொருளாளர் செய்யது மீரான், செயலாளர் முஜிபூர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகளும் இணைத்து வழங்கினார்கள்.