செய்துங்கநல்லூர் அருகில் அரசு பஸ் – கார் நேருக்கு நேர் மோதியதால் காரை ஓட்டி வந்த விவசாயி படுகாயம் அடைந்தார்.
சிவந்திபட்டியை சேர்ந்தவர் பிச்சாண்டி மகன் மாடசாமி(45). இவர் விவசாயம் செய்து வருகிறார்கள். கருங்குளம் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். செய்துங்கநல்லூர் அருகே வரும் போது எதிர்பாராத விதமாக உடன்குடி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பஸ் கார் மீது மோதியது. இடுபாடுகளுக்குள் சிக்கிய மாடசாமியை செய்துங்கநல்லூர் போலிஸ் சப்இன்ஸ்பெக்டர் ராஜாராம், சதீஷ் மற்றும் போலிசார் மீட்டு பாளை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலிசார் போக்குவரத்தினை சீர் செய்தனர். அரசுபஸ் டிரைவர் தென்காசி, இசக்கி மகன் சொக்கலிங்கம் மீது வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


