வல்லநாட்டில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது.
வல்லநாடு கூட்டுறவு சங்க தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர்கள் திருமலை, இச்கிராஜா, முத்துசாமி, காஞ்சனா, அருணாச்சலம், கல்லான்டன், கல்யாண சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் செங்கான் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் தீக்கனல் வெட்சுமணன் சிறப்புரையாற்றினார்.
அதிமுக சாதனை குறித்து தெருமுனை பிரச்சாரம் நடந்தது. முன்னாள் கவுன்சிலர் உதயசங்கர், செக்காரக்குடி அய்யம்பெருமாள், செந்தாமரை, செல்லத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் விஜய உடையார் நன்றி கூறினார்.


