ஆதிச்சநல்லூரில் பாளை சதக்கப்பதுல்லா அப்பா கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்.
பாளை சதக்கப்பதுல்லா அப்பா கல்லூரி நுண் உயிரியியல், சத்துணவியல் இளநிலை மாணவ மாணவிகள் கள பயணமாக நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் கள பணி செய்தனர். அவர்கள் நெல்லை அருங்காட்சியகம், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் போன்ற பகுதியில் களபணி செய்தனர். ஆதிச்சநல்லூரில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மாணவ மாணவிகளுக்கு ஆதிச்சநல்லூரில் ஆய்வுநடந்த இடத்தினை காட்டி விளக்கினார். முன்னதாக சதக்கப்பதுல்லா அப்பா கல்லூரி தமிழ் துறை தலைவர் மகாதேவன் கல்லூரியில் வைத்து மாணவ மாணவிகளுக்கு நெல்லை மாவட்டத்தின் தொல்லியல் குறித்து விளக்கம் அளித்தார்.
ஆதிச்சநல்லூரில் களப்பணி செய்த மாணவ மாணவிகள். ‘இங்கு அகழாய்வு செய்து எடுக்கப்பட்ட பொருள்களை இங்கேயே அருங்காட்சியம் அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துனர். கள பணியின் போது தமிழ் துறை பேராசிரியர் ஜிதேந்திரன், பேராசிரியர் ஆஷா ஆகியோர் உடன் வந்தனர்.