நெல்லை தூத்துக்குடி மாவட்ட எல்கையான கிருஷ்ணாபுரம் மற்றும் வசவப்பபுரத்தில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி வருகை தரும் அரசு மருத்துவர்களை கண்டித்து அனுப்பிய போலிஸ். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்தில் கருங்குளம், வல்லநாடு, செக்காரக்குடி அரசு ஆரம்ப சுகாதர நிலையம் உள்ளது. இங்கு கொரானா சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆரம்ப சுகாதர நிலையம் மூலமாக கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள 31 பஞ்சாயத்துகளில் உள்ள துணை சுகாதர நிலையம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மூன்று அரசு ஆரம்ப சுகாதர நிலைய டாக்டர்களும் நெல்லை மாநகரில் தான் வசித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் பணி முடிந்து செல்லும் போது கிருஷ்ணாபுரம் மற்றும் வசவப்பபுரம் சோதனை சாவடி வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் போதிய அடையாள அட்டை, அனுமதி கடிதம் இருந்தும் கூ ட சில போலீஸ் அதிகாரிகள் அவர்களை சோதனை செய்து வேண்டுமென்று மனஉழைச்சலுககு உள்ளாக்கு கிறார்கள்.
ஏற்கனவே கொரானா நோய் தடுப்புக்கு தன் உயிரை பணயம் வைத்து பணி செய்யும் டாக்டர், வேலைக்கு செல்ல அவர்களது குடும்பத்தினர் விரும்புவது இல்லை. ஆனாலும் சேவை மனப்பான்மையுடன் டாக்டர்கள் பணி செய்ய வருகிறார்கள். இவர்களுக்கு அனுமதி கடிதம் இருக்கும் பட்சத்தில் அவர்களை உடனே அனுப்பி வைத்து காவல் துறை அதிகாரிகள் உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவல் துறை அதிகாரிகள் இதுபோன்று கிடுக்கு பிடி போட்டும் கூட சம்பந்தம் இல்லாமல் பொதுமக்கள் சாலையில் சுற்றி திரிகின்றனர். இதனால் பாதிப்பு அவர்களுக்கு என்று தெரியாமல் மற்றவர்களை கஷ்டப்படுத்துகிறார்கள். இவர்களை போலிசார் மிகவும் கஷ்டப்பட்டுதான் கட்டுபாடுக்குள் கொண்டு வருகிறார்கள். எனவே காவல் துறையின் கட்டுபாட்டை நாம் குற்றசொல்ல இயலாது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அரசு விதித்த கட்டுபாட்டை அனுசரித்து செயல்படும் காவல் துறை அதிகாரிகள் பாராட்ட பட வேண்டியவர்கள் தான். ஆனாலும் டாக்டர்கள் தங்கள் இருப்பிடம் செல்வதற்கு அவர்கள் கருணை காட்டியே தீரவேண்டும். அல்லது மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர்களுக்கு சிறப்பு அனுமதியோ, அல்லது சிறப்பு அடையாள அட்டையோ வழங்கி அவர்களுக்கு உதவ வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


