தாமிரபரணி சுத்தப்படுத்தும் பணியை அரசு செய்ய முடியாத நிலையில் கொரானா வைரஸ் ஊரடங்கு உத்தரவு மூலம் செய்து முடித்துள்ளது.
கொரானா உலகத்தினையே ஆட்டிப்படைத்து வருகிறது. உலகத்தின் வல்லரசு நாடான அமெரி க்காவையே திக்கு முக்காட செய்து விட்டது. இந்தியாவை பொறுத்தவரை ஊரடங்கு உத்தரவிட்டு கொரானாவை கட்டுபாட்டுக்குள் வைத்துள்ளனர். இதனால் வாகன போக்குவரத்து 90 சதவீதம் குறைந்து விட்டது.
சுற்று சூழல் மாசு காரணமாக ஒசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் மாசு கட்டுபாடு ஏற்பட்டா காரணத்தினால் ஓசோன் மண்டலத்தில் பாதிப்பு மிக மிக குறைந்துள்ளது. அதுபோலவே சுவாச மண்டலத்தில் உள்ள அசுத்த காற்று குறைந்து தற்போது நல்ல காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டை விட்டு காணாமல் போன சிட்டுகுருவி போன்ற சிறு குருவி இனங்கள் தற்போது சுதந்திரமாக வானில் சிறகடித்து பறக்க ஆரம்பித்து விட்டது. அதோடு மட்டுமல்லாமல் தாவரங்கள் வளர்ச்சி உள்பட பல்வேறு சுகாதரத்துக்கு தேவையான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.
நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு ஓடி இப்பகுதிக்கு குடிதண்ணீர் ஆதாரமாக உள்ளது. இங்கு நெல்லை தூத்துக்குடி தென்காசி விருது நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நபருக்கு தினமும் 40 லிட்டர் தண்ணீர் விதம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 10 ஆண்டு களாக தாமிரபரணி தண்ணீர்மிக மோசமாகி கொண்டே இருந்தது. Êசாக்கடை தாமிரபரணியில் கலக்கப்பட்ட காரணத்தினால் தாமிரபரணி தண்ணீர் மிகமோசமாக மாறிக்கொண்டே இருக்கிறது. இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் தொடுத்த வழக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் கொரானா தாக்குதலை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, அதனால் மககள் நடமாட்டம் வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால் சாக்கடை கலப்பு தாமிரபரணியில் 50 சதவீதம் குறைந்து விட்டது. இதனால் தற்போது தண்ணீர் மிக சுத்தமாக வருகிறது.
இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, சுமார் 25 வருடங்களுக்கு முன்பு தாமிரபரணி தண்ணீர் மிகச்சுத்தமாக இருந்தது. இந்த தண்ணீர் தற்போது நகரங்கள் மற்றும் கரையோர கிராமங்களில் கலக்கப்படும் சாக்கடையால் சாக்கடை கலந்த தாமிரபரணியாக மாறிவிட்டது. இதுகுறித்து நான் தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதறகிடையில் கொரானா நோய் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட காரணத்தினால் தாமிரபரணியில் கலக்கும் சாக்கடையின் அளவு பாதியாக குறைந்து விட்டது. இதனால் தண்ணீர் சாக்கடை கலப்பின்றி தெளிவாக வர ஆரம்பித்து விட்டது. வருங்காலத்தில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசு தாமிரபரணி கரையை மேம்படுத்தி சாக்கடை கலக்காத நதியாக தாமிரபரணியை மாற்றி அமைத்தால், நாம் 25 வருடங்களுக்கு முன்பு எப்படி பார்த்தோமோ அதுபோன்ற தாமிரபரணியை பார்க்கலாம். அதோடு மட்டுமல்லாமல் தாமிரபரணியில் அழிந்து போன மீன் செல்வங்களை மீண்டும் மீட்டெடுக்கலாம் என கூறினார்.
இதற்கிடையில் நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் சமீப காலமாக சுற்றுவட்டார மக்களின் குளியல் கூடமாகவே இருந்தது. பாபநாசம் தலையருவி, அகத்தியர் அருவி போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்கசெல்வதை வனத்துறை அனுமதிக்காத வேளையில் முக்கூடல் வந்து சொகுசாக குளித்த பொதுமக்கள் , முக்கூடல் தாமிரபரணி ஆற்றை நிரந்தர சுற்றுலா தலமாகவே மாற்றினார்கள். இதனால் தினமும் 10ஆயிரத்துக்கு மேற்பட்ட வெளியூர் காரர்கள் இங்கு குளித்துவந்தனர். அவர்கள் தங்களது ஆடைகளை அப்படியே கழற்றி ஆற்றில் போட்ட காரணத்தினால் முக்கூடல் ஆறு துணி மூட்டைகள் தூர்நாற்றம் வீசி, தண்ணீரையும் மாசுப்படுத்திக்கொண்டிருந்தது. இங்குள்ள சமூக சேவகர்கள் அதை அடிக்கடி அகற்றி வந்தாலும் இங்கு வரும் மக்களை கட்டுபடுத்த இயலவில்லை. இதற்கிடையில் கொரானா ஊரடங்கு உத்தரவால் உள்ளூர் மக்களை தவிர வெளியூர் மக்கள் வராத காரணத்தினால் முக்கூடல் தாமிரபரணி மிக சுத்தமாக மாறிவிட்டது. மேலும் சாக்கடை கலப்பு, கழிவு நீர் கலப்பு 50 சதவீதம் குறைந்த காரணத்தினால் ஆற்று நீர் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி பார்த்தோமோ அது போலவே மாறி விட்டது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு செய்ய முடியாத தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை கொரானா செய்து முடித்தது என்பது சந்தோஷத்தினை வரவழைத்தாலும், தொடர்ந்து நாம் தான் உயிர்காக்கும் தாமிரபரணியை அழித்து வந்திருக்கிறோம் என நினைக்கும் போது வேதனை தான் வருகிறது. குறிப்பாக கொரானா போன்ற தொற்று நோய்கள் நீர் நிலைகளில் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே நாலு மாவட்டத்துக்கு நீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணியை இந்த காலகட்டத்தில் அவசர நிலையாக உணர்ந்து சாக்கடை காலக்காத எனவே வருங்காலத்திலாவது நாம் தாமிரபரணியை காப்பாற்ற வேண்டும் என்பதே தாமிரபரணி ஆர்வலர்களின் கோரிக்கை யாகும். இதற்காக தமிழக அரசு சாக்கடை கழிவு கலக்காத தாமிரபரணியை உருவாக்கவேண்டும். குப்பை தொட்டியாக தாமிரபரணி நாமும் பயன்படுத்தகக்கூடாது என உறுதி மொழி எடுக்கவேண்டும். இதுவே நமக்கு கொரானா கற்றுத் தந்த பாடம்.


