ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விதிமுறைகளை மீறுபவர்கள், வாக்காளர்களுக்கு அன்பளிப்பு, பணம் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாத்தான்குளம் அருகே முதலூரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சனிக்கிழமை தெரிவித்தார்.
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் சனிக்கிழமை மாலை எஸ்.ஜே மஸ்கோத் அல்வா விற்பனை ஜோரூம் திறப்புவிழாவில் பங்கேற்ற ஆட்சியர் சந்தீப்நந்தூரி, மஸ்கோத் தயாரிக்கும் முறையினை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு கட்டமாக 27 மற்றும் 30ஆம்தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புககளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. தேர்தல் பணியில் ஈடுப்பட உள்ளவர்களுக்கு 2ஆம் கட்டமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர், எஸ்.பி தலைமையில் அரசியல் பிரமுகர்கள் , மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வேட்பாளர்களை அழைத்து சிறப்பு கூட்டம் நடத்தி தேர்தல் பிரசாரம் மற்றும் அதற்கான அனுமதி பெறுவது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 12 இடங்களில் கவுண்டிங் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. 24ஆம்தேதி கவுன்டிங்கில் ஈடுப்படுவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது, 12 இடங்களில் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான மைய பகுதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எந்த விதமான பிரச்னைகள் இல்லாமல் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பறக்கும் படையினரிக்கு புகார் வந்தால் அனுமதி யின்றி பிரசாரம் மேற்கொள்வது, வாக்காளர்களுக்கு பணம் , பரிசு பொருகள் அளிக்கப்படுவது தடுக்கப்படுவுடன் அச்செயலில் ஈடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 374 வாக்குசாவடிகள் பதட்டமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் 125 வாக்குசாவடிகளுக்கு கண்காணிப்பு கேமராவும், 130 வாக்குசாவடிகளுக்கு கேமரா மேன் கொண்டு கண்காணிக்கப்படும். மற்ற பகுதிகளில் பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொள்வார்கள். அவர்களுக்கு அதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 7 கிராம ஊராட்சி வார்டுகளில் தேர்தல் புறக்கணிப்பு காரணமாக வேட்புமனு இல்லை. அதில் 6வார்டுகள் எங்களிடம் எந்தவிதமான புகார்கள் வரவில்லை. 1வார்டில் ரேசன் கடை கேட்டு புறக்கணித்துள்ளனர். அங்கு ரேசன் கடை அமைக்க அரசு விதிமுறை இல்லையென்றாலும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். அதற்கான அனுமதி வந்ததும் ரேசனை கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.