செய்துங்கநல்லூரில் தேர்தல் நடத்துவோருக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வெங்கடேஸ்வரா மகாலில் நடந்தது-
கருங்குளம் ஒன்றியத்தில் உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற டிசம்பர் 27 ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கிடையில் ஊரக உள்ளாட்சி சாதரண தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி செய்துங்கநல்லூரில் உள்ள புனித மேரீஸ் கல்வியல் கல்லூரியில் வைத்து ஏற்கனவே நடந்தது. இரண்டாம் கட்ட பயிற்சி செய்துங்கநல்லூரில் உள்ள வெங்கடேஸ்வரா மகாலில் வைத்து நடந்தது. ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தேர்தல் அதிகாரி சசிரேகா தலைமை வகித்தார் ஒன்றிய ஆணையாளர் சுப்பு லெட்சுமி, முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் தனபதி கலந்துகொண்டு பேசினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுல்தான் அலாவூதீன், ஸ்டிபன் ரத்ன குமார், லெட்சுமணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பயிற்சியில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலாசனை மற்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.