ஆறாம்பண்ணையில் வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
ஆறாம்பண்ணை பண்ணை மகாலில் நடந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி தலைமை வகித்தார். சித்த மருத்துவர் செல்வ குமார் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி வரவேற்றார்.
ஜமாத் செயலாளர் முன்னா முகம்மது முகாமை துவக்கி வைத்தார். முகாமில் பொது மருத்துவம், சித்த மருத்துவம், கண், பல் மருத்துவம், ஸ்கேன் உள்பட பல பரிசோதனைகள் செய்யப்பட்டது. 1158 பேர் இந்த முகாமில் பயன்பெற்றனர். நிகழ்ச்சியில் டாக்டர் சதீஸ், சுகாதர ஆய்வாளர் ஜாகிர், வைகுண்டத்தான், இப்பராகீம், சேக் அப்துல் காதர், ஒலி முகம்மது, பஷிர் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.