செய்துங்கநல்லூரில் தவ்ஹீத் ஜமா அத் பொதுக்கூட்டம் பஜார் திடலில் நடந்தது. மாவட்ட தலைவர் சமசுதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அசார் துவக்க உரையாற்றினார். மாநில பேச்சாளர்கள் கோவை ரஹ்மத்துல்லா, அப்துல் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்சியில் துணை தலைவர் வாசிம், துணை செலாளர் கரீம்பாஷா, பொருளாளர் அப்துல் கனி,கிளை பொருளாளர் அப்துல் கனி, ஜாபர் வசிமுல்லா, ஹனிபா, காஜா, சேக் அல்தாப், ஆபித் உள்பட பலர் கலந்துகொண்டரன். செயலாளர் வஹாப் நன்றி கூறினார். கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, ஆழ்வார்திருநகரி, காயல்பட்னடினம் உள்பட 23 கிளைகளில் இருந்து மக்கள் கலந்துகொண்டனர்.


