செய்துங்கநல்லூரில் ஒண்டி வீரன் பிறந்த நாள் விழா நடந்தது. செய்துங்கநல்லூர் சந்தையடியூர் அம்பேத்கார் நகரில் நடந்த இந்த விழாவிற்கு ஊர்த்தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். கருங்குளம் ஆதி தமிழர் கட்சி பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஒண்டி வீரன் படம், அம்பேத்கார் படம் திறக்கப்பட்டது. தொடர்ந்து மரம் நடும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆதி தமிழர் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன், தென்மண்டல பொறுபாளர் மனோகர், மாநில இளைஞரணி செயலாளர் சண்முகவேல், செய்துங்கநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கன்னையா பாண்டியன், முத்தாலங்குறிச்சி குளத்துப்பாசன துணை செயலாளர் அப்பாக்குட்டி, நீர்பாசன நலச்சங்க செயலாளர் குணேஷ்வரி, திமுக இளைஞரணி செயலாளர் குமார். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி முஸம்பில், செய்துங்கநல்லூர் ஊராட்சி செயலாளர் சங்கரபாண்டியன், சந்தையடியூர் ஊர் தலைவர் தங்கவேல், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மாடசாமி, புஷ்பம், தே.மு. தி. க வை சேர்ந்த திருவன், மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பெருமாள் வரவேற்றார். சுடலை மணி நன்றி கூறினார்.