
வல்லநாடு சித்த மருத்துவ அலுவலருக்கு சிறந்த மருத்துவருக்கான விருது மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 73 வது சுதந்திர தின கொண்டாட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரிதலைமையில் நடந்தது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார்.
சித்த மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்றியமக்காக வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமாருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
சான்றிதழ் பெற்ற சித்த மருத்துவர் அவர்களை மருத்துவ துறை சார்பாக அனைத்து பணியாளர்களும் வாழ்த்தினார்கள்.