ஆழிகுடி ஆர்.சி.துவக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ஜெசி தலைமை வகித்தார். ஆசிரியர் லூயிஸ் முன்னிலை வகித்தார் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தேசியகொடியேற்றி வைத்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் துரைப்பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இராமனுஜம்புதூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கணபதி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி முன்னிலை வகித்தார். முதுகலை தமிழ் ஆசிரியை அந்தோணியம்மாள் தொகுத்து வழங்கினார். தேசியகொடியேற்றப்பட்டு, பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்து, பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியை எஸ்தர் சாரா நன்றி கூறினார்.


