காயல்பட்டிணம் வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உமறுப்புலவர் முத்தமிழ் மன்ற தொடக்க விழா நடந்தது. தமிழ் துறை தலைவர் அருணா ஜோதி தலைமை வகித்தார். தமிழ்துறை உதவிப்பேராசிரியர் ஏஞ்சல் லதா வரவேற்றார். முன்றாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி சாரா சமிரா கிராத் பாடினார். மூன்றாமாண்டு தமிழ் இலக்கிய மன்றச்செயலர் சுபா மன்ற அறிக்கை வாசித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உமறுப்புலவர் முத்தமிழ் மன்றத்தினை துவக்கி வைத்தது, உமறுப்புவலர் வரலாறு மற்றும் பொதிய மலை சிறப்புகளை பற்றி சிறப்புரையாற்றினார். தமிழ்துத்துறை உதவிப்பேராசியர் முத்துகுமாரி நன்றி கூறினார். மூன்றாமாண்டு தமிழ் இலக்கிய மாணவி ஆயிஷா சித்திகா துஆ கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் துறையினர் செய்திருந்தனர்.