செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில் 35 மூட்டைகளுடன் அடை காத்த மலை பாம்பு பிடிபட்டது.
முத்தாலங்குறிச்சி பிள்ளையார் கோயிலை சேர்ந்தவர் சுப்புலெட்சுமி (50). இவருக்கு சொந்தமான வைக்கோல் போர் சிவன் கோயில் அருகில் உள்ளது. நேற்று காலை 10 மணி யளவில் அவர் வைக்கோல் போரில் மாட்டுக்கு வைக்கோல் சேகரிக்க சென்ற போது வித்தியாசமான சத்தம் வந்தது. அப்போது அவர் கூர்ந்து பார்த்த போது அங்கு மலை பாம்பு ஒன்று அடை காத்து கொண்டிருந்தது தெரிந்தது. உடனே அவர் கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு வசம் தெரிவித்தார். அவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். வனச்சரகர் அலுவலர் விமல் குமார் தலைமையில் வனவர் சேகவன், வன காப்பாளர் பாலகிருஷ்ணன், வேட்டை தடுப்பு காவலர்கள் சங்கரலிங்கம், சண்முகவேல், காசிராஜன் கொண்ட குழுவினர் மலை பாம்பு இருந்த இடத்துக்கு வந்தனர். அங்கு அடைகாத்த பாம்பை பத்திரமாக பாதுக்காக்க வேண்டி பாம்பு ஆர்வலர் ரமேஷ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரமேஷ் மூட்டையோடு பாம்பை லவகமாக பிடித்து வல்லநாடு மலைப்பகுதியில் வாக்கி டாக்கி டவர் அருகில் அமைக்கப்பட்டிருந்த பாம்பு அடைகாக்கும் பகுதியில் கொண்டு பத்திரமாக சேர்த்தார்.
இந்த மலைபாம்பு அடைகாத்த இடத்தில் சுமார் 25 முதல் 35 வரை முட்டைகள் இருந்தாக தெரிகிறது. இதுவரை இந்த பகுதியில் நீளமான மலை பாம்புகள் கிடைப்பது சகஜமாக இருந்தது. ஆனால் முதல் முதலாக அடைகாக்கும் மலை பாம்பு கிடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


