செய்துங்கநல்லூர் நூலகம் சார்பில் வாசிப்பு இயக்கம் நடந்தது.
செய்துங்கநல்லூர் ஜோஸ்மெட்ரிக் பள்ளியில் நடந்த வாசிப்பு இயக்கத்துக்கு பள்ளி முதல்வர் ஜெய்தூண் பீவி தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி ராஜேந்திரன் வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சிறப்புரையாற்றினார். வாசகர் வட்டத்தினை சேர்ந்த கோபால் உள்பட பலர் பேசினர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாசிப்பு நன்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ், ஆங்கில, நாளிதழ்கள் மேலும் புத்தகங்கள் வழங்கப்பட்டு, அதை வாசிக்க செய்தனர். பின் மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. நூலகர் துரைராஜ் நன்றி கூறினார்.


