வல்லநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சித்த மருத்துவ சிறப்பு கருத்தரங்கம், மூலிகை கண்காட்சி நடைபெற்றது. முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.சுந்தரி தலைமை வகித்தார். பள்ளியின் துணை முதல்வர் மோகன் முன்னிலை வகித்தார். ஆசிரியை ஜோஸ்லின் வரவேற்றார்.
முகாமில், சித்த மருத்துவர் செல்வகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக சித்த மருத்துவ மூலிகைகளின் பயன்கள் குறித்து சிறப்பு கண்காட்சி மூலமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு சித்த மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
இதில், பள்ளி ஆசிரியை&ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, ராதா, குயின்மேரி, மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், உடற்கல்வி இயக்குநர் ரவி நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் டாக்டர்.செல்வகுமார் தலைமையில் சித்த மருத்துவ பிரிவினர் செய்திருந்தனர்.


