கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கான ‘மை ரோட்டரி’ இணையதளப் பயிற்சி ஆசியா பார்ம்ஸ் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
ரோட்டரி சங்கத்தின் செயல்பாடுகள், உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் சேவைத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் பன்னாட்டு ரோட்டரியின் ‘மை ரோட்டரி’ இணையதளத்தில் கைபேசி மூலம் பதிவேற்றம் செய்வது குறித்தும், இணையதளத்தை முறையான வழியில் கையாள்வது குறித்தும் இப்பயிற்சியில் விரிவாக விளக்கப்பட்டன.
இப்பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர்கள் முத்து செல்வம், ஆசியா பார்ம்ஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கச் செயலாளர் ரமேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட ரோட்டரி மாவட்ட நிர்வாகச் செயலாளர் யூசுப் ராஜா, கைபேசி வாயிலாக ‘மை ரோட்டரி’ இணையதளத்தில் சேவைத் திட்டங்கள் மற்றும் உறுப்பினர்களின் தகவல்களைப் பதிவேற்றம் செய்வது குறித்துச் செயல்விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ரவி மாணிக்கம், கண்ணன், மாரியப்பன், மணிகண்டன், நடராஜன், ராஜமாணிக்கம் உள்ளிட்ட புதிய உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். நிறைவாக ரோட்டரி சங்க உறுப்பினர் இளங்கோவன் நன்றி கூறினார்.


