தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கோளரங்கங்களை உருவாக்கவும், 1 முதல் 12ஆம் வகுப்பு வரை முழுமையான வானவியல் பாடத்திட்டத்தை வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்தித் தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி (டாஸ்) மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம், கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அமைப்பின் மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ செயலாளர் முத்து முருகன், டாஸ் மாநிலச் செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாஸ் மாநிலச் செயலாளர் சாந்தி வருகை தந்தவர்களை வரவேற்றார்.
கூட்டத்தில் டாஸ் மாநிலப் பொதுச்செயலாளர் மனோகர் கலந்துகொண்டு, பல்வேறு மாவட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசித்தார். தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பின்வரும் முக்கியத் தீர்மானங்களை அவர் வாசித்தார்: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவீனக் கோளரங்கங்களை அரசு உருவாக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை முழுமையான வானவியல் பாடத்திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.மாணவர்களின் கவனத்தை அறிவியல், கணிதத்தின் மீது ஈர்க்கும் வகையில், கோவையில் நடைபெறவுள்ள இளையோர் வானவியல், விண்வெளி அறிவியல் மாநாட்டில் கல்லூரி மாணவர்களைப் பெருமளவில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.இக்கோரிக்கைகளை வலியுறுத்திப் பொதுக்குழுவில் ஒருமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவ்விழாவில் டாஸ் மாநிலத் துணைத் தலைவர் சக்திவேல், மாநிலச் செயலாளர்கள் சிந்தியா, நித்யா உட்படச் சென்னை, திருவள்ளூர், விருதுநகர், திருச்சி, மதுரை, கோவை, சேலம், தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தின் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவாகத் தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் துணைத் தலைவர் கமலா ராணி நன்றி கூறினார்.130720261


