முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்த் இன்று சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், இன்று ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்து மூலவர் மற்றும் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். வாரவிடுமுறை தினமான இன்று திருச்செந்தூரில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகக் காணப்பட்ட நிலையில், பொதுமக்களோடு இணைந்து அவரும் வழிபாடுகளை மேற்கொண்டார்.


