தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்குக் வரும் சனிக்கிழமை முதல் குடிநீர் விநியோகம் சீராக்கப்படும் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்குக் குடிநீர் கொண்டு வரும் வல்லநாடு தலைமை நீர்ரேற்று நிலையப் பகுதியில் கடந்த 10 நாட்களாகத் தொடர்ந்து கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, வல்லநாட்டில் இருந்து குழாய்கள் மூலம் மாநகரப் பகுதிக்குக் கொண்டு வரப்படும் குடிநீரை, ஆங்காங்கே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் முழுமையாக ஏற்றிச் சேமிக்க முடியாத அசாதாரணச் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் நேரடி விளைவாகவே மாநகரின் பல்வேறு வார்டுகளில் குடிநீர் விநியோகம் தடைப்பட்டு வருகிறது.
மாநகரப் பகுதியில் நிலவும் இக்குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கத் தேவையான மாற்று மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் வருகிற சனிக்கிழமை முதல் மாநகர் பகுதி முழுவதும் வழக்கம் போல் தங்குதடையின்றிச் சீரான குடிநீர் விநியோகம் முழுமையாகச் செய்யப்படும் என்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


