திருநெல்வேலித் திருவள்ளுவர் பேரவையின் 85 ஆவது மாதாந்திர கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது கவிஞர் சிவ ராமச்சந்திரன் தலைமை தாங்கினார் கூட்டுறவுத்துறை மேனாள் தணிக்கை அதிகாரி மீனாட்சி நாதன்மற்றும் அரிமா ஜவகர் துரை முன்னிலை வகித்தனர்.
பேரவை அமைப்பாளர் ந. ஜெயபாலன் வரவேற்புரை ஆற்றினார்
தலைமை தாங்கிய கவிஞர் சிவ ராமச்சந்திரன் பேரவையில் பங்கேற்கும் கவிஞர்களின் கவிதை இயற்றும் திறமைகளைச் சொல்லி ,தமிழில் இலை என்ற ஒரு சொல் கரும்புக்கு தோகை, நெல்லுக்கு தாள் என்றும், தாவரங்களின் தன்மைக்கு ஏற்ப பெயர் சொல்லி நாம் அழைக்கிறோம். இதுதான் தமிழின் ஆழம் என்று சொல்லி, பரிதிமாற் கலைஞர் தொட்டு கலைஞர் வரை தமிழ் செம்மொழி ஆவதற்காக எப்படி எல்லாம் போராடினார்கள் என்று சொல்லி அதை மிக அழகாக கவிஞர் ஸ்ரீ ராம் தன்னுடைய படைப்பிலே சொல்லி இருக்கிறார் என்று சொல்லி பேசினார்.
மீனாட்சி நாதன் அவர்கள் புகைவண்டியில் வழி அனுப்ப வந்த என்ன புகைவண்டியில் ஏற்றி அனுப்பவுது போன்றுமுன்னிலை
வகிக்க சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லி நகைச்சுவையாக பேசினார். ஜவகர் துரை இது போன்ற தமிழ் அமைப்புகளுக்கு வரும்போதுதான் தமிழில் சுவையை சுவைக்க முடிகிறது என்றுபேசினார்.
வாசுகி வளர் கல்வி மையத்தின் அமைப்பாளர் உக்கிரன் கோட்டை மணி அவர்கள் கம்பராமாயணத்திலிருந்து ஒரு காட்சியை விளக்கினார்
கவிஞர் காயல் அருள் சிட்டுக்குருவிகள் ஏன் அழிகிறது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ஆசிரியை மீனாட்சி ரவிச்சந்திரன் முடியாது என்று சொல்ல வேண்டிய இடங்களில் முடியாது என்று சொல்வதற்கு தயங்க கூடாது என்ற தலைப்பில் பேசினார்.
கவிஞர் குமாரசாமி அழகு என்பது ஐந்தாம் வேதம் என்று சொல்லி பாரதிதாசனின் அழகியல் குறித்து
பேசினார்.
தணிக்கை அதிகாரி மீனாட்சி நாதன் திருவள்ளுவர் பேரவையின் அறக்கட்டளை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.
கவிஞர் சக்தி வேலாயுதம் அப்துல் ரகுமானின் கவிதை நூலைத் திறனாய்வு செய்தார்.
வானொலி ஆர்வலர் சாத்தான்குளம் மயில் நன்றி உரை ஆற்றினார்.
கூட்டத்தில் கவிஞர்கள் ஶ்ரீராம், முத்துராமன்,, பெருமாள், ரவிச்சந்திரன், எழுத்தாளர் வள்ளி சேர்மலிங்கம், போன்ற பலரும் கலந்து கொண்டனர்.


