ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா கடந்த ஜன.29-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாள் விழாவில், தினமும் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி, மதுரை முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து புனிதரின் சப்பர பவனி நடைபெற்றது. பக்தர்கள் உப்புத் தூவி நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஆலயப் பங்குத் தந்தை மோட்சராஜன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


