தூத்துக்குடியில் உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற 122 மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்’ சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட முயன்ற 122 மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.


