தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி 153-ஐ நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடி டிடிபிஎஸ் அனல்மின் நிலைய நுழைவு வாயில் முன்பாக தமிழ்நாடு மின் வாரிய மின் உற்பத்தி மற்றும் விநியோக வட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு மாநில பொது செயலாளர் ச. பாலா என்ற பாலசந்தர் தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மேலும், வருகின்ற 27ஆம் தேதி செவ்வாய் கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.


