தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நீர்வளச் சூழலியல் மேலாண்மைத்துறை மற்றும் கோவில்பட்டி நிவேதா புவி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து நடத்திய “நீர்வாழ், நிலப்பரப்பு மற்றும் உணவு சுற்றுச்சூழல் அமைப்புகளில் வளர்ந்து வரும் மாசுபாடுகள்” குறித்த சர்வதேச மாநாடு ஜனவரி 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணை தொகுப்பாளர் ராமமூர்த்தி அய்யம்பெருமாள் கலந்து வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மீன்வளக்கல்லூரி மற்றம் ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் முதல்வர் ரா. சந்தானம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இக்கல்லூரியின் முதல்வர் சி. ஆ. சண்முகம் தமது வாழ்த்துரையில் இதுபோன்ற சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்வதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
பின்னர் இம்மாநாட்டின் நினைவாக ஆய்வுச்சுருக்கப்புத்தகம் வெளியிடப்பட்டது. தேசிய மற்றும் சர்வதேச விஞ்ஞானிகள் முக்கிய குறிப்புரைகள் வழங்கினர். மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் என மொத்தம் 129 பேர் இம்மாநாட்டில் பங்கேற்றனர். மொத்தம் 86 ஆய்வுச்சுருக்கங்கள் பெறப்பட்டு 55 ஆராய்ச்சிக் கட்டுரைகள் வழங்கப்பட்டன. சிறந்த வாய்மொழி மற்றும் சுவரொட்டி உரைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.


