விருதுநகர் மாவட்ட காவல்துறையைக் கண்டித்து தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு. சீனிவாசன் மாநில துணைத் தலைவர்கள் ஆ.அம்சராஜ், தே.முருகன் மாநில செயலாளர் க.நீதிராஜா விருதுநகர் மாவட்ட தலைவர் பாண்டித்துரை, மாவட்ட செயலாளர் கா.கருப்பையா மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தமிழ் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது விருதுநகர் டி.எஸ்.பி யோகேஷ்குமார் உதவி ஆய்வாளர் ராமர் ஆகியோரின் தலைமையில் காவல்துறையினர் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் உமாதேவி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மகேந்திர பிரபு மற்றும் 70 பெண்கள் உட்பட 150 பேர் கலந்து கொண்டனர்


