தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பிறை குடியிருப்பில் உள்ள சிவந்தி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வை தலைமை தாங்கிய கல்லூரி முதல்வர் எஸ்.லீலா “மதி அழிக்கும் போதை பொருளால் மனிதனடையும் மாற்றங்கள், எல்லா ஆற்றலுமுடைய மூளையை அடிமையாக்கும் போதைத்தனம் மற்றும் அதிலிருந்து பயமின்றி துணிவாக வெளிவரும் வழிகள் குறித்து உரையாற்றினார். கணிதத்துறை மாணவி சிவ வர்ஷினி போதைப் பொருள் பயன்படுத்துவதால் உடல் உறுப்புகள் அடையும் பாதிப்பினைக் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கல்லூரி மாணவிகளால் நடத்தப்பட்ட, போதைப்பொருள் ஒரு மனிதனை எந்த அளவு தூண்டச் செய்து மிருகமாக்கும் என்பதனை மாணவிகள் மெய் சிலர்க்கும் விதத்தில் நடித்துக் காட்டினர். முன்னதாக ஆங்கிலத் துறை பேராசிரியர் செல்ஷியா வரவேற்புரையாற்றினார். நிறைவாக கணிதத்துறை பேராசிரியர் ஜெயக்குமாரி நன்றியுரை ஆற்றினார்.


