தினகரன் நாளிதழில் ஞாயிற்றுகிழமை நான் எழுதிய கள்ளிக்காட்டு கள்ளவாண்டன் நாவல் விமர்சனம் வெளிவந்துள்ளது. வெளியிட்ட திரு. பேராட்சி கண்ணன் மற்றும் ஆசிரியர் குழுவிற்கும் தினகரன் நிர்வாகத்துக்கும் நன்றி. விமர்சனத்தினை படித்து கருத்தை பதிவிடுங்கள் நண்பர்களே.நூல்வேண்டுவோர் 8760970002 என்றஎண்ணில் தொடர்பு கொள்ளவும் -முத்தாலங்குறிச்சி காமராசு
வ ரலாற்று ஆய்வு நூல்களை எழு துவதில் குறிப்பிடத்தக்கவர் முத் தாலங்குறிச்சி காமராசு, அவரது சமீபத்திய புதினமே இந்த ‘கள்ளிக்காட்டு கள்ளவாண்டன்’. முத்தாலங்குறிச்சி எனும் ஊரில் காவல் தெய்வமாக இருக்கிற கள்ள வாண்டன்தான் இந்த நாவலின் மையம். ஊரைச் சுற்றியும் தெய்வத்தைச் சுற்றியுமே நடக்கும் கதை என்பதால் வாசிப்பதற்கு விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யம் குறையாம லும் இருக்கிறது. காதல், வீரம், பரபரப்பு என அனைத்தும் சேர்த்து எழுதப்பட்ட இந்த நாவல், ஆசிரியரின் கற்பனை கதையே.” நல்லவன் ஒருவன் திருந்தி வாழ நினைத் தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை இருபத்தியேழு அத்தியாயங்களில் விறுவி றுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறார்.
(கள்ளிக்காட்டு கள்ள வாண்டன், முத்தா லங்குறிச்சி காமராசு, பொன்சொர்ணா, விலை: ரூ.300/-, தொடர்புக்கு: 87609 70002)


