தூத்துக்குடியில் ரோச் பூங்கா உட்பட 7 இடங்களில் உயரம் குறைவான மின் விளக்கு கோபுரங்கள் அமைக்க உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து மேயர் கூறுகையில், “தூத்துக்குடி மாநகராட்சியில் பிரதான சந்திப்புகள், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் உயரம் குறைவான மின் விளக்கு கோபுரங்கள் அமைத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக மக்களின் கோரிக்கையினை தொடர்ந்து ரோச் பூங்கா, பழைய துறைமுக சந்திப்பு ஆஷ் நினைவு பூங்கா, கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு, எட்டயபுரம் ரோடு, திரேஸ்புரம் கடற்கரை பகுதி என மேலும் ஏழு இடங்களில் இதுபோன்ற விளக்குகள் அமைய இருக்கின்றது என்று தெரிவித்தார்.


