பொட்டலூரணியில் கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400 ஆவது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் கழிவுமீன் நிறுவனங்களை மூடக் கோரி கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில, தொடர் போராட்டம் தொடங்கிய 400 ஆவது நாள் நிகழ்ச்சி பொட்டலூரணியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் போராட்டக்குழு பொறுப்பாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.
பொறுப்பாளர் இராதாகிருஷ்ணன் வரவேற்றார். தமிழ்த் தேசியப் பேரவை பொறுப்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்த தென்மாறன், சமூக ஆர்வளர் மோகன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். புதுக்கோட்டை பாவாணன் சிறப்புரை ஆற்றினார். திருவைகுண் செயபால், இளங்கோ பாண்டியன், லெனின், தங்கராச் உள்ளிட்ட தமிழ் ஆர்வளர்களும் திரளான ஊர்ப் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் பேசிய நிர்வாகிகள், “கழிவு மீன்நிறுனங்கள் மூடப்படவேண்டும்; பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போராட்டக்குழுவின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் என்று தெரிவித்தனர். நிறைவாக பொறுப்பாளர் பால்ராச் நன்றி கூறினார்.


