கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் அதிகமாக மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். மீனவர்கள் தொழிலுக்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக கடலில் ஏற்படும் சீற்றம், காற்று, இடி மின்னல் போன்றவைகளால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த காலகட்டங்களில் மீனவர்கள் பாதுகாப்பாக தொழில் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் ரிலையன்ஸ் அறக்கட்டளை கடல் காலநிலை குறித்த தகவல்களை தினமும் வழங்கி வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு நிகழிச்சியினை மார்தாண்டம்துறை கிராமத்தில் நடத்தியது. மீன்வளத்துறையின் முன்னாள் இணைஇயக்குனர் ரவீந்திரன் அவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும் போது எடுத்துச்செல்ல வேண்டிய ஆவணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், ஆபத்துக்காலங்களில் சமிக்கை செய்யவேண்டிய அடையாளங்கள், மீன்பிடி கலத்தில் கவனிக்க வேண்டிய கருவிகள், ஆபத்துக்காலத்தில் தொடர்பு கொள்ளவேண்டிய தொடர்பு எண்கள் குறித்து விளக்கினார். இதில் சுமார் 40 மீனவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


