தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், எட்டயபுரம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் போன்ற தாலுகாகளில் மானாவாரியில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு 60 நாட்களை தாண்டி வளர்ந்து வருகிறது. ஒரு சில இடங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிரில் படைப்புழுவின் தாக்கம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை அளந்தா மற்றும் காசிலிங்கபுரம் கிராமங்களில் நடமாடும் தகவலகம் மூலம் மக்காச்சோள பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. ஸ்கேட் வேளாண் அறிவியல் நிலையத்தின் வல்லுநர் முத்துக்குமார் அவர்கள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள நிலங்களுக்கு சென்று பயிரில் நோய் மற்றும் பூச்சி தாக்கத்தின் அடிப்படையில் விளக்கம் அளித்தார். இதில் சுமார் 30 விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


