ஐக்கிய நாடுகள் சபை எல்லா வருடமும் நவம்பர் 21 ஆம் தேதியை உலக மீனவர் தினமாக கொண்டாடுகிறது. ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் வைத்து மீன்வளத்துறையுடன் இணைந்து அனுசரிக்கப்பட்டது. மீன்துறை உதவி இயக்குனர் அஜித் ஸ்டாலின், மீன்துறை ஆய்வாளர் ஜெகன் மற்றும் லிபின் மேரி ஆகியோர் முன்னிலையில் தூத்தூர் யூதா ததேயு கல்லூரியில் உள்ள நாட்டு நலப்பணி திட்டத்தில் உள்ள மாணவ மாணவிகள் மீன்பிடி துறைமுகத்தை தூய்மை செய்தனர். பின்னர் உலக மீனவர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகச்சியில் 40 இற்கு மேற்பட்ட மாணவர்களும் மீனவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


