காசி அய்யா அவர்களிடமும், சரவணன் அய்யா அவர்களிடமும் ஜாபர் பாலத்தினை பார்க்க வேண்டும் என்று கூறினோம்.
எனவே எங்கள் வாகனத்தினை அந்த பாலத்தினை நோக்கி செலுத்தினார்கள்.
நமது நாட்டில் தனித் தீவான இராமேஸ்வரத்தைத் தமிழகத்துடன் இணைக்கக் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் போலவே இருந்தது. கடலுக்குள் பார்க்க இயலாது.அந்த அளவுக்கு சுவரை உயரமாக கட்டியிருந்தார்கள்.
குவைத்தில் உள்ள இந்த நீண்ட பாலத்தை இருவழிச் சாலையாக கட்டியுள்ளனர். ஒன்று குவைத் நகரிலிருந்து புபியான் தீவுக்கு போவதற்கும், அடுத்தது புபியான் தீவுவிலிருந்து குவைத் நகருக்கு வருவதற்கும் பயன்படுத்துகின்றனர். அந்த பயணத்தினை உற்சாகமாக செய்தோம். அதோடு மட்டுமல்லாமல் மறு பகுதியில் உள்ள பாலைவனம் பகுதியையும் நாங்கள் பார்த்தோம்.
வழியில் இரண்டு இடத்தில் இளைப்பாரும் இடம் இடம் இருந்தது. இந்த இடத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஹோட்டல் பார்க்கிங், பொழுது போக்கு அம்சம் உருவாக்குவதற்கான பணி நடந்து கொண்டிருந்தது.
இந்த இந்த பாலத்தின் பயணத்தினை ஆய்வு செய்து எழுதிக்கொண்டிருக்கும் போதும், இந்த கட்டுரையை முடிவுக்கு கொண்டு வரும் நிலையிலும் டிசம்பர் 21, 2024 அன்று நமது பாரத பிரதமர் மோடிக்கு குவைத்தின் உயரிய விருது கிடைத்த தகவல் வந்து சேர்ந்தது.
இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு குவைத் பொறியாளர் சங்க பொருளாளர் சுப்பிரமணியன் அவர்களிடம் தகவல் சேகரித்தேன். அதோடு மட்டுமல்லாமல் மறுநாள் தினத்தந்தியில் இந்த செய்தி முதல் பக்க தலைப்பு செய்தியாகவும் வெளிவந்திருந்தது.
2 நாள் பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு குவைத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேற்கு ஆசிய நாடு களில் ஒன்றான குவைத்துடன், இந் தியா நீண்ட கால மாக சிறந்த உறவு களை பேணி பாதுகாத்து வருகிறது. வர்த்தக கூட்டாளி களில் முன்னணியில் குவைத்தும், அந்த நாட்டின் முக்கிய வர்த்தக பங்காளர்களில் முன்னணியில் இந்தியாவும் உள்ளன.
இதைப்போல குவைத்தில் வாழும் வெளிநாட்டினர்களில் இந்தியர்களே அதிகம் உள்ளனர். குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் அதாவது 10 லட்சம் பேர் இந்தியர்கள் ஆவர்.
இத்தகைய பாரம்பரிய நட்பை பேணி வரும் இரு நாடுகளும் சிறப்பான தூதரக உறவுகளையும் பேணி வரு கின்றன.
இந்த உறவுகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் நோக்கில் பிரதமர் மோடிக்கு, குவைத் மன்னர் ஷேக் மிஷல் அல் – அகமது அல்- ஜாபர் அல்-சபா விருந்தினராக வந்து செல்ல அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி 2 நாள் பயணமாக குவைத் சென்றார்.
முதல் நாள் தலைநகர் குவைத் சிட்டி யில் இறங்கிய அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குவைத் துணை பிரதமர் ஷேக் பகத் யூசுப் சவுத் அல்-சபா மற்றும் வெளியுறவு மந்திரி அப்துல்லா அலி அல்- யாகியா மற்றும் அதிகாரிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
மேலும் அங்கு வாழும் ஏராளமான இந்தியர்களும் திரண்டு வந்து பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். இந்திய தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு ‘மோடி மோடி’ என அவர்கள் எழுப்பிய கோஷத்தால் பிரதமர் நெகிழ்ச்சி அடைந்தார்.
குவைத்தில் பிரதமரின் 2 நாள் பயணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார். முக்கியமாக குவைத் மன்னர், பட்டத்து இளவரசர் உள்ளிட்ட பல்வேறு தலை வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், பல்வேறு துறைகளில் இருத்தரப்பு ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. 26-வது அரேபிய வளைகுடா கால்பந்து போட்டி தொடக்க விழாவிலும் பங்கேற்றார்.
குவைத் சிட்டியில் இந்தியாவின் மிகப்பெரும் காவியங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை அரபி மொழியில் வெளியிட்ட குவைத் நாட்டவர்களை சந்தித்து பேசினார். அதன்படி புத்தகத்தின் மொழி பெயர்ப்பாளர் அப் துல்லா அல் பரோன் மற்றும் பதிப்பாளர் அப்துல் லத்தீப் அல் நெசப் ஆகிய இருவரையும் பிரதமர் மோடி சந்தித்தார். அத்துடன் அந்த பிரதிகளில் தன்னுடைய கையெழுத்தும் போட்டு கொடுத்தார்.
இதற்கிடையே பிரதமர் மோடி தங்கியிருந்த ஓட்டலில் இந்திய முன்னாள் வெளியுறவு அதிகாரியான 101 வயது மங்கள் செயின் ஹண்டாவை சந்தித்தார்.
பிரதமரைப் பார்த்து ஹண்டா மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். அப்போது அங்கே கூடியிருந்த இந்தியர்கள் ‘வந்தே மாதரம்’ என கோஷமிட்டு தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்:
பின்னர் பிரதமர் மோடி தனது திட்டமிடப்பட்ட நிகழ் வுகளில் பங்கேற்றார். முதல் நிகழ்ச்சியாக குவைத்தில் வாழும் இந்திய தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
மினா அப்துல்லா என்ற இடத்தில் சுமார் 1,500 இந்தி ‘யர்கள் தங்கியிருக்கும் தொழிலாளர் முகாமில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அந்த தொழிலாளர்களுடன் சகஜமாக உரையாடிய பிரதமர் மோடி; அவர்களது நல்வாழ்வு மற்றும் பணி விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டியும் அருந்தினார்.
பின்னர் தலைநகரில் உள்ள ஷேக் சாத் அல் -அப்துல்லா உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்தியர்களை சந்தித்து பேசும் ‘ஹலோ மோடி’ என்ற சிறப்பு நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
குவைத்தில் வாழும் இந்தியர்கள் என்மீது காட்டிய அரவணைப்பும், பாசமும் மிகவும் சிறப்பாக இருந்தது. குவைத்தில் வாழும் இந்திய சமூகத்தினரால் இரு நாட்டு உறவுகள் வளமாக இருக்கிறது.
தங்கள் கடின உழைப்பு, சாதனை மற்றும் பங்களிப்பு மூலம் குவைத்தின் வளர்ச்சியில் நீங்கள் ஆற்றி வரும் பங்க ளிப்பை பாராட்டுகிறேன். இதை குவைத் அரசும், சமூகமும் பரவலாக அங்கீகரித்து உள்ளது.
உலகுக்கு ஒரு நண்பனாக இந்தியாவின் அணுகுமுறை உள்ளது. அனைத்து துறைகளிலும் குறிப்பாக தொழில் நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் நிலைத்தன்மையில் இந்தியா வேகமான வளர்ச்சியையும், உருமாற்றமும் பெற்று வருகிறது. நிதி உள்ளடக்கம், பெண்களை தலைமையிலான வளர்ச்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை சாதித்து இருக்கிறோம்.
இந்தியாவில், ஸ்மார்ட் டிஜிட்டல் அமைப்புகள் இனி ஆடம்பரமானதாக இருக்காது. மாறாக சாமானியரின் அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதி யாக மாறிவிட்டன.
எதிர்கால இந்தியா உலக வளர்ச்சியின் மையமாக, உல -கின் வளர்ச்சி எந்திரமாக இருக்கும். இந்தியா உலகின் சிறந்த நன்மைக்கான தொலை நோக்கு பார்வையுடன் முன்னேறி வருகிறது.
என பிரதமர் மோடி குவைத் வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார்.
இந்தியாவில் – அடுத்த மாதம் 2025 (ஜனவரி) 5 நடைபெறும் கும்பமேளா மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர் தின கொண்டாட்டங்களில் பங்கேற்க வருமாறும் அங்குள்ள இந்தியர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
குவைத்துக்கு 43 ஆண்டுகளுக்கு பின் செல்லும் இந்திய பிரதமர், மோடி ஆவார். கடைசியாக 1981-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இங்கு சென்றிருந்தார்.
2 -வது நாள் குவைத் பயணத்தில் பாயன் அரண்மனையில் குவைத் மன்னர் ஷேக் மிஷல் அல்- அகமது அல்-ஜாபர் அல்- சபாவை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தகவல்தொழில், மருந்து பொருட்கள், பின்டெக் உள்கட்டமைப்பு ஏற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்ததாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருந்தார்.
அவர், ‘குவைத் மன்னர் ஷேக் மிஷல் அல் அக் மது அல்-ஜாபர் அல்-சபாவுடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. நமது நாடுகளுக்கிடையே உள்ள நெருங்கிய உறவுகளுக்கு ஏற்ப, தமது ஒத்துழைப்பை ஒரு வியூகமாக உயர்த்தியுள்ளோம். வரும் காலங்களில் தமது நட்பு மேலும் வலுப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’ என குறிப் பிட்டு இருந்தார்.
அரண்மனையில் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைப்போல குவைத் பிரதமர் அகமது அப்துல்லா அகமது அல்-சபாவுடனும் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார்.
உயர் மட்டக்குழுவினருடன் இந்த சந்திப்பை இரு பிரதமர்களும் நடத்தினர். வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு ராணுவம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் செயல் திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக விவாதித்தார்.
மேலும் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் காவித் அல்-ஹமது அல்-முபாரக் பிரதமர் மோடிக்கு விருந்து அளித்து கவுரவித்தார்.
இந்த சந்திப்புகளை தொடர்ந்து இத்தியா & குவைத் இடையே புரிந்துணர்வு கையெழுத்தாகின.
இதில் முக்கியமாக பாதுகாப்புத்துறையில் இரு தரப்பு ஒத்தழைப்பு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்து போடப்பட்டது. இதன் மூலம் ராணுவ தொழிற்சாலைகள், தளவாடங்கள் வினியோகம், கூட்டு ஒத்திகை, பயிற்சி, வீரர்கள் நிபுணர்கள் பரிமாற்றம், ஆய்வு மற்றும் மேம்பாட்டில் இரு நாடுகளும் இணைந்து செயல் பட முடியும்.
விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் சோலார் எரிசக்தி துறையில் தலா ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. குவைத் தலைவர்களுடனான சந்திப்பின்போது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுடன் இணைந்து செயல்படுவதை தீவிரப்படுத்த இந்தியா ஆர்வம் காட்டியது.
மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ‘முபாரக் அல்-கபீர் ஆர்டர்’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மன்னர் ஷேக் மிஷல் அல்- அகமது அல்-ஜாபர் அல்-சபா வழங்கி கவுரவித்தார்.
இரு நாடுகளுக்கு இடை யேயான நட்பு மற்றும் ஒத் துழைப்பை வலுப்படுத்த பாரத பிரதமர் மோடி எடுத்து வரும் முயற்சிகளுக்கு குவைத் மக்களின் நன்றி யின் சின்னமாக இந்த விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்டு பிரதமர் மோடி, இந்த மதிப்பு மிக்க விருதானது, இந்தியா, குவைத் இடையேயான நீண்டகால நட்புறவுக்கான அர்ப்பணிப்பின் அடை யாளமாக உள்ளது. இந்த உறவுகளை மேலும் உயரத்துக்கு எடுத்துச் செல்ல உறுதி பூண்டுள்ளேன்’ என்று கூறினார். இந்த உயரிய விருதை இந்நிய மக்களுக்கும், இந்தியா குவைத் இடையேயான வலுவான நட்புறவுக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். பின்னர் தனது எக்ஸ் தளத்திலும் இந்த விருது குறித்து குறிப்பிட்டு இருந்தார்.
விருதை வழங்கி குவைத் மன்னர் பேசும்போது. “இது எங்கள் நாட்டின் உயரிய விருது. அதை பெறுவதற்கு நீங்கள் தகுதியானவர் என பாராட்டினார்”. பிரதமர் மோடி பெற்ற 10- வது சர்வதேச விருது இதுவாகும்.
நட்பின் அடையாளமாக வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அரச குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இந்த விருது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் இங்கிலாந்து மன்னர் சார் லஸ் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
குவைத்தில் நமது பாரத பிரமரின் சுற்றுப்பயணம் மிகச்சிறப்பாக முடிந்தது. ஏற்கனவே நமது பாதுகாப்பு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் குவைத் சென்று வந்த நிகழ்வையும் இந்த நூலில் பதிவிட்டுள்ளேன்.
இந்த நிகழ்வுகளை பதிவு செய்த எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த தகவலை இந்த நூலில் குறிப்பிடுவதில் நான் பெருமை கொள்கிறேன்.
குவைத் பயணத்தின் இறுதி கட்டத்துக்கு வந்து விட்டோம். எனவே பாலத்தில் நாங்கள் செய்த பயணத்தினை பற்றி, அது சம்பந்தமாக நான் சேகரித்த தகவல்களை வைத்து அசைபோட ஆரம்பித்தேன்.
உலகின் மிகப்பெரிய பாலம் திட்டங்களில் ஒன்றான பாலம் இதுவாகும். குவைத் சிட்டிக்கும் சுபியா பகுதிக்கும் இடையே வளைகுடாவின் குறுக்கே 36 கிமீ நீளமுள்ள கான்கிரீட் பாலத்தில் தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த பாலம் குவைத் நகரத்தையும் புதிய மதீனத் அல்-ஹரீரையும் (சில்க் சிட்டி) இணைக்கிறது. இது 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமாகும்.
இந்த திட்டமானது கரையோர வசதிகள், 27 கிமீ தரைப்பாதை மற்றும் 200 மீ அகலம் மற்றும் 23 மீ உயரம் கொண்ட ஒரு அழகிய உயர்த்தப்பட்ட பாலமாகும். இந்த பாலத்தின் வழியாக குவைத் நகரத்திற்கும் சுபியா பகுதிக்கும் இடையே உள்ள தூரம் 104 என்பது 36 கி.மீ ஆக குறையும். இதனால் போக்குவரத்து நேரம் 90 முதல் 30 நிமிடங்கள் வரை குறையும். இந்த பாலம் குவைத்தின் மிகப்பெரிய மற்றும் சவாலான போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும்.
இறந்த ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபாவின் பெயரிடப்பட்டது. இதன் மொத்த திட்ட செலவு 3 பில்லியன். கட்டுமான காலம் 2013 ல் தொடங்கி 2018 ல் முடிந்தது.
பாலத்தில் நாங்கள் சென்றோம். ஓரிடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். கடலுக்குள் இளைபாறும் இடங்கள் கட்டியுள்ளார்கள். பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை. பாலம் முடிந்தவுடன் பாலை வனத்தினை பார்த்தோம். பரந்த நிலையில் இருந்த பாலைவனத்தில் நாங்கள் சுற்றி பார்த்து விட்டு, அதன் பின் திரும்பினோம்.
மிக அருமையாக இருந்தது. ஆங்காங்கே கண்காணிப்பு கமரா பொருத்தியிருக்கிறார்கள். ஆகவே பாலத்தின் மீது நின்று புகைப்படம் எடுக்க வேண்டாம் என நண்பர்கள் அறிவுருத்தினார்கள். ஆனாலும் நெடும் பயணமாக சென்று விட்டு நாங்கள் திரும்பினோம்.
காலையிலிருந்து மதியம் வரை சுமார் 300 கிலோமீட்டர் தூரம் பயணித்திருப்போம். நிறையத் தகவல்களைப் பெற முடிந்தது. இந்தப் பயணத்தைச் சிறப்பாகத் திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தனர் சரவணன் அய்யாவும், காசி விஸ்நாதன் அய்யாவும்.
அதன் பின் எங்கள் இருவரையும் அவர்கள் நாங்கள் தங்கியிருந்த இடத்தில் கொண்டு விட்டார்கள்.
சிறிது நேரத்தில் மதிய உணவை வாங்கிக்கொண்டு செயலாளர் அசோக் மற்றும் பொருளாளர் சுப்ரமணியனும் விடுதிக்கு வந்து வந்தனர்.
அந்த உணவு சிரியன் உணவகத்தில் தயாரித்தது. கபாப், பிரியாணி மற்றும் சில இறைச்சி துண்டுகளும், சப்பாத்தி போன்ற சுவையில் ரொட்டிகளும் இருந்தது. வயிற்றை நிறைத்து கொண்டோம். இப்போது ரசித்து சாப்பிட இயலவில்லை. ஏன் என்றால் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும். அதன் பின் ஊருக்கு கிளம்ப வேண்டும். எனவே நாங்கள் உடனே தயாரானோம்.
(குவைத் பயணம் அடுத்து வாரம் முடியும்)


