தூத்துக்குடி முத்தம்மாள் காலனி குடியிருப்போர் பொது நலச்சங்க 20வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
செயலாளர் த. தமிழ்ச் செல்வன் வரவேற்று பேசினார். நலச்சங்க தலைவர் சி.தங்கராஜா தலைமை உரையாற்றினார். முதன்மை விருந்தினராக ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜதுரை வாகைக்குளம் சிறப்புரை ஆற்றினார். தூத்துக்குடி தெற்கு மண்டலத் தலைவர் பாலகுருசாமி, மாநகராட்சி 2வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுப்புலட்சுமி பொன்ராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில்,அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை வத்சலா தேவி தொகுத்து வழங்கினார். துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார். பொதுக் குழுக்கூட்டத்தில் பொருளாளர் சண்முக சந்தரம் வரவு செலவு அறிக்கையை வாசித்தார். நிறைவாக நாகராஜ் நன்றி கூறினார்.


