சட்ட ஒழுங்கில் சிறப்பாக பணியாற்றிய வகைக்கு ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் பத்பநாபபிள்ளைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் லெட்சுமி பதி குடியரசு தினவிழாவை முன்னிட்டு தருவை மைதானத்தில் வைத்து நற்சான்றிதழ் வழங்கினார். அருகில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா உள்பட பலர் இருந்தனர். நற்சான்றிதழ் பெற்ற இன்ஸ்பெக்டர் பத்பநாபபிள்ளையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,ஸ்ரீவைகுண்டம் துணை கண்காணிப்பாளர் மற்றும் சக காவலர்கள் பாராட்டினர்.


