தூத்துக்குடி சிஜிஇ காலனியில் புதிய தார் சாலை மற்றும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிஜிஇ காலனி பகுதியில் ஆரம்பமாக போகும் புதிய தார் சாலை மற்றும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான பால குருசாமி, வட்ட கழக செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர் வைதேகி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.


