தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாளை 21ஆம் தேதி பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி ரெங்கநாதபுரம் தெரு கிழக்கு, சி.எம். மேனிலைப் பள்ளியில் நாளை 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, “பேசும் கலை வளர்ப்போம்”, என் உயிரெனும் மேலானத் தலைப்பில் 18 வயது முதல் 35 வரையிலானவர்களுக்குப் பேச்சுப்போட்டி மாவட்ட, மண்டல, மாநில அளவில் விரைவில் நடைபெற இருக்கிறது. பேச்சுப்போட்டியில் 10 தலைப்புகளில் ஒரு தலைப்பில் உரையாற்ற வேண்டும்.
www.kalaignar100pechu.org வளைதளத்திலும், அஞ்சலில் “614, அன்பகம் அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18 என்ற முகவரிக்கு பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியில் வெற்று பெறுவோர்க்கு முதற் பரிசு ரூ.1லட்சம், இரண்டாம் பரிசு ரூ.75ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு 8903876891 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


