வல்லநாட்டில் சாராள் தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் – முன்னாள் மாணவியர் சங்கம் சார்பில் காசநோயாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல்
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சாராள் தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் – முன்னாள் மாணவியர்கள் சங்கம் இணைந்து காசநோயாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (11.07.2024) வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். அ.கிருஷ்ணஜோதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் திருமதி.அய்யம்மாள் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.
சாராள் தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் – முன்னாள் மாணவியர்கள் சங்கம் சார்பில் வழங்கிய கல்வி உபகரணங்களை
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். அ.கிருஷ்ணஜோதி அவர்கள் காசநோயாளிகளின் குழந்தைகளுக்கு வழங்கி பேசுகையில், சாரா டக்கர் என்ற மாற்றுத்திறனாளியான பெண் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 1843 இல் முதன் முதலாக சாதாரண பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, பிற்காலத்தில் பள்ளியை தரம் உயர்த்தி கல்லூரியாக 1895 ஆம் ஆண்டில் பெண்களுக்கான முதல் கல்லூரியாக செயல்பட தொடங்கியது. சாரா டக்கர் அவர்களின் மறைவுக்குப் பிறகும் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சமூகப் பணியுடன் கூடிய கல்விப் பணி இன்றளவும் காலத்தால் அழியாமல் உள்ளது. சாரா டக்கரை போன்று கல்வியில் தொடர் சேவையாற்றி வரும் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் – முன்னாள் மாணவியர்கள் சங்கத்திற்க்கு சுகாதார துறையின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்கள்.
இறுதியாக ஆய்வக நுட்பனர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நம்பிக்கை மைய ஆய்வகநுட்பனர் திருமதி.உஷாராணி, மருத்துவமனை பணியாளர் திரு.வேம்பன், சுகாதாரத் துறை பணியாளர்கள், காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சாராள் தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் – முன்னாள் மாணவியர்கள் சங்கம் ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


