தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் உள்ளது வசவப்பபுரம் கிராமத்தில் சுமார் 600 வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி கீழபுத்தனேரி , முறப்பநாடு புது கிராமம், முறப்பநாடு, கோவில்பத்து, நாணல்காடு , வல்லநாடு கஸ்பா, கீழ வல்லநாடு, வட வல்லநாடு, கலியாவூர் பஞ்சாயத்து, சிங்கத்தாறிச்சி பஞ்சாயத்து, ஆலந்தா, எல்லை நாயக்கன்பட்டி, பூவானி, வடக்கு காரசேரி, செக்காரகுடி ஆகிய பஞ்சாயத்துக்களை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள், திருவைகுண்டத்தில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்திற்க்கோ, செய்துங்கநல்லூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்க்கோ அல்லது வங்கிகள் மற்றும் அங்கு நடக்கும் வார சந்தைக்கோ, கால்நடை மருத்துவமனைக்கோ, செய்துங்கநல்லூரில் இருந்து ரயில் மூலம் திருச்செந்தூர் கோவில், குலசேகரன்பட்டிணம் கோவில், நாலுமாவடி தேவாலயம் சென்று வர பேருந்து மூலம் KTC நகர் க்கு சென்று அங்கிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள VM சத்திரத்திற்க்கு நடந்து சென்று பிறகு அங்கிருந்து இரண்டாவதாக வேரு பேருந்து மூலமாக தான் செய்துங்கநல்லூர் மற்றும் ஏனைய பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது .
இதனால் கிராம மக்கள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள் .
திருநெல்வேலி ஜங்சன் பேருந்து நிலையத்தில் இருந்து பாளைமார்க்கெட், சமாதானபுரம்,High Ground அரசு மருத்துவமனை, KTC நகர், சாரதா கல்லூரி, வசவப்பபுரம் வந்து அனவரதநல்லூர், நாட்டார்குளம் வழியாக செய்துங்கநல்லுர் சென்று திருவைகுண்டம் வரை ஒரு தினசரி தொடர் பேருந்து சேவையை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்ப்படி கிராம மக்கள் சார்பாக சமூக ஊடகம் வாயிலாக கோரிக்கை வைக்கிறேன் .
மேற்ப்படி கோரிக்கையானது நிறைவேற்றபடும் பட்சத்தில் பொதுமக்கள் மிக மிக பயன்பெறுவார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாததோடு அரசின் மீதும் பொதுமக்கள் மத்தியில் நற்ப்பெயர் ஏற்ப்படும் என்பதே உண்மை.
என்றும் சமூக நல பணியில் : வசவப்பபுரம் மு.கணேசன்.
பதிவு :11.07.2024.


