தினகரன் ஆன்மிக மலர் முன்னாள் ஆசிரியருமான எழுத்தாளர் பிரபுசங்கர் அய்யா, குடும்பத்தோடு நெல்லை வந்திருந்தார்கள். அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அய்யாவை நான் தற்போதைய ஆன்மிக மலர் ஆசிரியர் கிருஷ்ணா அவர்கள் மூலம் அறிந்தேன். அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் தந்தார். அத்ரி மலை யாத்திரை தொடர், ஜமீன் கோயில்கள் தொடர் தினகரனில் எழுத வைத்தது. சுமார் 100 மேற்பட்ட ஆன்மிக கட்டுரை தினகரனில் எழுத வைத்தது என அவரோடு என் பணி தொடர்ந்தது. அவர் எழுதி 108 வைணவ தலங்கள் தொடரில் பாண்டிநாட்டு திருப்பதி, மலை நாட்டு திருப்பதி என 24 கோயிலுக்கு புகைப்பட கலைஞராக பணியாற்ற வாய்ப்பு தந்தார். இதற்காக நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டம், மற்றும் கேரளா மாநிலங்களில் சுற்றி வந்தோம். தொடர்ந்து பணி நிறைவு பெற்ற பிறகும் கூட அவர் என் முன்னேற்றத்தில் உதவியாக இருந்தார். குறிப்பாக தாமரை பிரதர்ஸ் மீடியா தினமலரில் நூல் வெளியிட அறிமுகம் செய்தவர் அவர்தான். எனது பதிப்பகத்துக்கு நூல் அச்சிட நல்ல பிரண்டரை அறிமுகம் செய்ததும் அய்யாத்தான். தொடர்ந்து நான் எழுத்தாளராக இயங்க எந்த வகையிலாவது எனக்கு உதவியாக இருப்பவர் அய்யாத்தான். நன்றி அய்யா.– அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு


