தூத்துக்குடி மாவட்ட தரைப்படை தனிப்பிரிவு கமாண்டிங் அலுவலர் பிரதோஷ் உத்தரவுபடி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டுவரும் தேசிய மாணவர்படைக்கு முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருகின்றது.
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை தரைப்படைப்பிரிவு செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் படித்து வரும் மாணவர்களை முதலாம் ஆண்டு தேசிய மாணவர்படையில் சேர்ப்பதற்கு தூத்துக்குடியில் இருந்து ஜேசிஓ சந்திரசேகர் மற்றும் என்.சி.ஓ. சுரேஷ் ஆகியோர் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களை தேர்வு செய்தனர். அவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் முத்துசிவன் வரவேற்றார். பள்ளி எண் சி சி அலுவலர் மாணிக்கம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.


