எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரலாறு, நாவல், பயணக்கட்டுரை, தொல்லியல் , ஆன்மிகம், சித்தர் வரலாறு, களரி அடிமுறை, ஜமீன்தார்கள் வரலாறு என களப்பணி செய்து இதுவரை 75 நூல்களை எழுதியுள்ளார். இவர் பெயரில் முத்தாலங்குறிச்சி காமராசு டாட் காம் (muthalankurichikamarasu.com)என்ற பெயரில் வெப்சைட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த வெப்சைட்டில் இவர் எழுதிய நூல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் டூடே நியூஸ் என்ற பெயரில் தினசரி செய்திகளையும், இவர் சம்பந்தப்பட்ட செய்திகள், வீடியோ போன்றவற்றை பகிர்ந்து வருகிறார். இதுவரை 129 நாடுகள் இவரது வெப்சைட்டை பார்த்து வந்தனர். தற்போது துருக்கி நாடும் இந்த வெப்சைட்டை பார்க்க இணைந்த காரணத்தினால் நாட்டின் எண்ணிக்கை 130யை தொட்டது. மேலும் இதுவரை 4 லட்சத்து 60 ஆயிரம் பார்வையாளர்களை இந்த வெப் சைட் நெருங்கியுள்ளது. கடந்த மாதம் இவர் குவைத் நாட்டுக்கு சென்று தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க 25 வது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு ஆதிச்சநல்லூர் குறித்தும், தாமிரபரணி குறித்தும் பேசினார். மேலும் ஆச்சி சொன்ன ஆத்ரோக்கதை என இவர் எழுதிய நூலை பற்றி அங்கு நடந்த மற்றொரு கூட்டத்திலும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.



