செய்துங்கநல்லூர் அருகே உள்ள வசவப்பபுரத்தில் ச.ம.க சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள்விழா நடந்தது.
வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பேத்கார் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. துணை ஒன்றிய செயலாளர் அந்தோணி சிலுவை, அவை தலைவர் பெருமாள், சடகோபன், இளைஞர் அணி செயலாளர் அமல்ராஜ், துணை செயலாளர் முத்துகுமார், பொருளாளர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


