ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கொங்கராயகுறிச்சி கேம்பிரிட்ஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 38வது ஆண்டுவிழா மற்றும் விளையாட்டுவிழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித்தாளாளர் பால்ராஜ் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பொன்விக்டோரியா முன்னிலை வகித்தர். ஆசிரியர் மணிகண்டன் ஆண்டறிக்கை வாசித்தார். மூத்த ஆசிரியர் ரத்தினசாமி வரவேற்றார். விழாவில், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ்பயஸ் அருள், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வகுப்பு வாரியாக முதல் மதிப்பெண்களை பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகளையும், கடந்தஆண்டு 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் இடம் பெற்ற மாணவர் முகமதுசல்மான் பார்சி, 2ம் இடம்பெற்ற மாணவி சப்ரின் பாத்திமா ஆகியோருக்கு தங்கநாணயம் பரிசாக வழங்கினார்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஸ்ரீவைகுண்டம் கிளைமேலாளர் இளங்கோவன் 10ம்வகுப்பு பொதுத் தேர்வில் ஆங்கில பாடத்தில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி முத்துலெட்சுமிக்கு பரிசு வழங்கினார். முன்னதாக, அத்லெட்டிக் பயிற்சியாளர் கர்ணன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விளையாட்டு விழாவில் கராத்தே பயிற்சியாளர் குழந்தைசாமி தலைமையில் மாணவ-மாணவியர்கள் கராத்தே சாகசங்களையும், உடற்கல்வி ஆசிரியர் முருகன் தலைமையில் மாணவ-மாணவியர்கள் பிரமிடுகளையும் செய்து அசத்தி பாராட்டு பெற்றனர்.
தொடர்ந்து மாணவ-மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஆசிரியை-ஆசிரியர்கள், மாணவ-மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், பள்ளியின் மூத்தஆசிரியை பிச்சம்மாள் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை, ஆசிரியர்களான சண்முகவேல், சுந்தர்ராஜ், காசிராணி, அன்னம்மாள், செல்லத்தாய், இசக்கியம்மாள், எஸ்தர், பியூலா, லதா, செல்வபிரியா, சேர்மகனி தேவி, புஷ்பா, கவிதா உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.


