ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த வியாபாரிகள் சங்க கூட்டத்தில் புதிய செயலாளர் தேர்வு செய்யப்பட்டார்.
ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் சங்கத் தலைவர் காளியப்பன் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் லெட்சுமணன், சட்டஆலோசகர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் கந்தசிவசுப்பு வரவேற்றார்.
கூட்டத்தில், மறைந்த சங்கசெயலாளர் தங்கவேல் என்ற மணிக்கு இரங்கல் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்பு சங்கத்தின் புதிய செயலாளராக ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, கோடை காலத்தை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க தடை விதிக்கவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், துணைச்செயலாளர் பாலசுப்பிரமணியன், சங்கரன், செந்தில், பூவலிங்கம், ராமன்பிள்ளை மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


