முத்தாலங்குறிச்சியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பழமையான அபூர்வ லெட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. தென்னகத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல்லை நகரத்துக்கு அடுத்தப்படியாக இங்குதான் லெட்சுமி நரசிம்மர் மூலஸ்தானத்தில் உள்ளார். இது மிகவும் சிறப்பானதாகும். இந்த ஆலயத்தில் சுவாதி திருவிழா மிகவும் சிற்பபாக நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு ராமவிநாயகர், சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர், லெட்சுமி நரசிம்மர் , பைரவர் உள்பட தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் தீபாரதனை நடந்தது. சுவாமிக்கு விளக்கு பூஜை மற்றும் திருமஞ்சனம் மிகச்சிறப்பாக நடந்தது. கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமை என்பதால் சுவாமி அலங்கார சிறப்பு தரிசனம் மிக விமர்சையாக நடந்தது. மாலையில் சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரருக்கு பிரதோசம் நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை லெட்சுமி நரசிம்மர் பக்த கைங்கர்ய சபா தலைவர் சோமசுந்தரம் தலைமையில் சேஷய்யன் உள்பட பக்த குழுவினர் ª சய்திருந்தனர். அர்ச்சகர்கள் ராமேஷ், சேகர், பூஜை ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.


