விடியல் டிரஸ்ட் நிறுவனமானது, விளாத்திகுளம் பகுதியை மையமாகக் கொண்டு, நீர் வடிப் பகுதிகள் அமைப்பது, விவசாயிகளுக்கு தன் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குவது, இயற்கை உர பயன்பாடுகளின் நன்மைகள் போன்ற விழிப்புணர்வு கொடுக்கும் பணிகளை செய்து வருகிறது. மேலும் இதன் தொடர்ச்சியாக கழுகுமலை பகுதிகளிலும் நீர்வடிப் பகுதி அமைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு பணி செய்து வருகிறது. தற்போது டாடா சோலார் பவர் நிறுவனத்துடன் இணைந்து (பெரு நிறுவன சமூகப் பொறுப்பு ) CSR – திட்டம் மூலம் கங்கைகொண்டான் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஐந்து பஞ்சாயத்து கிராமங்களை தேர்வு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் மகளிர்க்கு தையல் இந்திரங்களை கிராமத்தின் பொது இடத்தில் நிறுவி கிராமப்புற பெண்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி மேம்படுத்துவது, காவேரி மருத்துவமனையுடன் இணைந்து, கிராமங்களிலுள்ள மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவதன் மூலம் சிகிச்சை மேற்கொள்வது, என பணிகளை மேற்கொண்டு செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி கல்வியை கொடுப்பதன் மூலம் அவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதற்காக தென்கலம் புதூர் என்ற கிராமத்தை தேர்வு செய்து, அந்த கிராமத்தின் படிப்பகத்திலேயே கணினி மையத்தை நிறுவியுள்ளார்கள்.
இந்த கணினி மையத்திறப்பு விழாவிற்கு, தொழில் சார்ந்த உபகரண தயாரிப்புகளின் தலைவர்.முகுல் மிஸ்ரா மற்றும் பெரு நிறுவனத்தின் சமூக பொறுப்பு – தலைவர்.மரிதாஸ் தலைமை தாங்கினர். விடியல் டிரஸ்ட் நிறுவனர், முனைவர்,K.ஜோதிமணி வரவேற்புரை நிகழ்த்தினார். திறப்பு விழாவில் பங்கேற்ற இளைஞர்களுக்கு கணினி கல்வியின் அவசியம் பற்றி மரிதாஸ் எடுத்துரைத்தார். கணினி மையத்தை தென்கலம் புதூரில் அமைத்ததற்காக பஞ்சாயத்து தலைவர். ஷேக் அப்துல் காதர் கிராமத் தலைவர். சுடலை, கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் மகேஷ் ராஜ் மற்றும் பணித்தள ஒருங்கிணைப்பாளர் உஷா நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான இளைஞர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கணினி மையத் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை வின்பர்ட், குமார், மேரி மற்றும் விடியல் டிரஸ்ட் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இறுதியாக விடியல் டிரஸ்ட் நிறுவனர் முனைவர் K.ஜோதிமணி நன்றி கூற நிகழ்வு இனிதே நிறைவுற்றது.


