இலந்தகுளத்தில் இருந்து செல்வ சங்கருக்கு தீடீரென் உடல் சரியில்லாமல் போய் விட்டது. அதோடு மட்டுமல்லாமல் பித்து பிடித்தவர் போல ஆகிவிட்டார். இவர் நண்பர்களுடன் பல இடங் களில் அலைந்து வருபவர். எனவே அவருக்கு பேய் எதுவும் பிடித்து இருக்குமோ என எண்ணி, அவரது உறவுக் காரரும் தாத்தாவுமான சமயபுரம் மாரியம்மனை தனது இல்லத்தில் வைத்து வணங்கி வருகின்ற இலந்தகுளத்தினை சேர்ந்த வெள்ளையத் தேவரிடம் கூட்டிச் சென்றனர்.
வெள்ளயத்தேவர் இவரை அம்மன் முன்னால் அமர வைத்தார். அதன் பின் அவருக்கு திருநீறு கொடுத்தார். அந்த சமயத்தில் செல்வ சங்கருக்கு கண்ணீர் வந்தது. அதை கண்ட வெள்ளயத்தேவர் உன்னிப் பாக செல்வ சங்கரை கவனித்தார். இவரது செயல் எல்லாமே மிக வித்தியாமாக இருந்தது. எனவே தொடர்ந்து இரண்டு நாள் திருநீறு போட அவரை அழைத்து வரச்சொன்னார். அதன் பிறகும் செல்வ சங்கருக்கு காய்ச்சல் குறைய வில்லை. அப்போது வெள்ளையத் தேவர் தான் வணங்கும் தெய்வத் திடம் இவரை பற்றி குறிக்கேட்டார். அதன் பிறகுதான் குடும்பத்தாரிடம் அந்த தகவலை கூறினார்.
செல்வ சங்கர் மேல் வீரபாண்டி செல்லாயி இறங்கியிருக் கிறாள். கோயில் திருவிழாவிற்கு முன்பே இவரை முன்னீர் பள்ளம் ஊருக்கு அழைத்து சென்று விடுங்கள் இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று கூறினார் கள். அதிர்ந்து போய் விட்டார், அவரது அக்காள் வேலம்மாள். உடனே இவரை பஸ்ஸில் ஊருக்கு அழைத்து வந்து விட்டார்.
இவர் கோயிலுக்கு சென்று அங்கு அம்மனை வணங்கி நின்றார். அப்போதே இவரை சாமி ஒரு ஆட்டு ஆட்டி அருகில் உள்ள வேதாளம் சிலை மீது தள்ளி விட்டு விட்டது. அங்கிருந்த மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு வீட்டுக்கு வந்தார் செல்வ சங்கர்.
வீட்டில் தன் தந்தையிடம் “தம்பிக்கு அம்மன் அருள் வந்துள்ளது எனவே தம்பியை ஊருக்கு அழைத்துச்செல்ல சாமியாடி தாத்தா அனுப்பி விட்டார்” என கூறினார்.
தந்தைக்கு மிகவும் கோபமாகி விட்டது. அந்த கோபம் அம்மன் மீது பாய்ந்தது. “அவனோ சிறு பயல் அவனுக்கு அம்மன் வந்தால் தாங்க இயலுமா? அவன் விளையாட்டு பிள்ளை. நானோ ஒத்தைக்கு ஒரு பிள்ளை வைத்து இருக்கிறேன். அந்த அம்மனை தாங்கும் அளவுக்கு மனப்பக்குவம் வரவேண்டுமே. அந்த அளவுக்கு விரதம் இருக்க வேண்டுமே. அதெல்லாம் இருக்க இயலுமா? என நினைத்து அம்மன் மீது கோபப்பட்டு, அம்மனையே பேசியுள்ளார். ஆனால் அம்மன் அதையெல்லாம் கண்டு கொள்ள வில்லை. அம்மன் முடிவை யார் மாற்ற இயலும். மனித பிறவிகளால் அவள் கட்டளையை மீற முடியுமா?. அதற்கான நாளை அவள் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.
இதற்கிடையில் யாதவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் தீர்த்தம் எடுக்க இவரது தந்தையை தேடி வந்துள்ளார்கள். இந்த சமயத்தில் செல்வ சங்கருக்கு அருள் வந்து ஆடி, தனது தந்தையை தள்ளிவிட்டு தீர்த்தமெடுக்க கிளம்பி விட்டார். அந்த வருடம் 1996. அந்த வருடத்தில் இருந்து அம்மன் அருள் பெற்று கோயிலில் அம்மன் கொண்டாடியாக இதுவரை உள்ளார்.
இவர் இந்த பகுதியில் கவுன்சிலாக பணியாற்றி மக்கள் சேவையும் செய்து வருகிறார். தற்போது கூட முன்னீர் பள்ளத்தினை பற்றி வரலாறு கேட்கும் போது எங்களிடம் முற்காலத்து வரலாறு தற்காலத்து வரலாறு என ஒவ்வொன்றாக எடுத்துக்கூறி வருகிறார்.
முன்னீர் பள்ளத்தின் ஊரில் தோன்றி நெல்லை மாநகரில் மிகப்பெரிய உணவு விடுதி நடத்தும் ஒரு குடும்பத்தினரை பற்றி அவர் எங்களிடம் ஒரு தகவலை கூறினார்.
பெரும்பாலுமே நமது நூலில் நாம் முற்கால வரலாற்றையும் ஆன்மிகத்தினை எழுதி வருகிறோம். பிற்காலத்தில் வருபவர்கள். அவர்களுக்கு எது தேவையோ அதை பிரித்து எடுத்துக்கொள்ளலாம். ஆகவே தான் நாம் தற்போது பயணித்துக்கொண்டிருக்கும் நிகழ்கால வரலாற்றையும் எழுதுகிறோம். நாம் எழுதும் இந்த நிகழ்கால வரலாறு தான் பிற்காலத்தின் இவ்வூரின் சிறப்பாக கூட இருக்கலாம். ஆகவே தான் இந்த முயற்சி.
திருநெல்வேலி நகரத்தில் ஸ்ரீபுரத்திலும், பாளையங்கோட்டை கிருஷ்ணா ஆஸ்பத்திரி எதிரிலும், தற்போது வளர்ந்து வரும் நகரங்களாக பாளையங்கோட்டை பெருமாள் புரம் அன்பு நகர் பகுதியிலும், பாளையங்கோட்டை கே.டி.சி நகர், தியாகராஜ நகர், முருகன் குறிச்சி போன்ற இடங்களில் மதுரம் சைவ உணவு விடுதி உள்ளது.
ஹோட்டல் ஸ்ரீ மதுரம் என்ற பெயரில் இந்த சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இவர்கள் தரமான தென்னிந்திய சைவ உணவுகளை உருவாக்குகிறார்கள். தங்கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தவும் மகிழ்ச்சியடையச் செய்யவும் பிரதான இலக்குடன், தரம் மற்றும் சுவையில் சமரசம் செய்து கொள்வதில்லை. எனவே இவர்களுக்கு என்று நெல்லையில் தனியாக உணவு விரும்பிகள் உள்ளனர்.
திருநெல்வேலி சோதி குழம்பு என்பது பிரபலமானதாகும். இந்த சோதி குழம்புக்கு மிகவும் பெயர் பெற்றவர்கள்தான் ஸ்ரீமதுரம் உணவகத்தினர். இவர்கள் வெளிபுறப்பகுதியிலும் மக்களின் முன் தகவலுக்கு ஏற்ப உணவை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது, மற்றும் பரிமாறும் சேவை மூலம் ஆட்களை கொண்டு பரிமாறுவதில்லை வல்லவர்களாக விளங்கி வருகிறார்கள்.
இணைய தளம் மூலமாக முன்பதிவு செய்தும் கூட இவர்களிடம் உணவு பெற்றுக்கொள்ளலாம்.
இந்த உணவு விடுதியை உருவாக்கியவரின் பூர்வீகம் முன்னீர் பள்ளம் என்பது மிகவும் பெருமையாகும். அவர் யார்?, அவர் எப்படி இந்த தொழிலுக்கு வந்தார்? என்பதை அறியலாம்.
(நதி வற்றாமல் ஓடும்)


